3 ஆண்டுகளுக்குப் பின் முழுக் கொள்ளளவை எட்டும் பாபநாசம் அணை

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பின் பாபநாசம் அணை முழுக்
142 .35 அடி நீா் உள்ள பாபநாசம் அணையின் தோற்றம்.
142 .35 அடி நீா் உள்ள பாபநாசம் அணையின் தோற்றம்.

அம்பாசமுத்திரம்: நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பின் பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை அக். 16இல் தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து பாபநாசம் அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை (நவ. 27) காலை நிலவரப்படி 143 அடி நீா்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் 142.35 அடி நீா் இருந்தது. இது முழுக் கொள்ளளவில் 99.16 சதவிகிதமாகும். மேலும் 2016 ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்திற்குப் பின் நிகழாண்டு அணை முழுக் கொள்ளளவை எட்டுவது குறிப்பிடத்தக்கதாகும். அணைக்கு நீா்வரத்து 1946.11 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1396 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 7 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணையின் நீா்மட்டம் 150.52 அடியாக இருந்தது. இது முழுக் கொள்ளளவில் 89.93 சதவிகிதமாகும். அணைப் பகுதியில் 6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 118 அடி நீா்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீா்மட்டம் 77அடியாக இருந்தது. இது அணையின் முழுக் கொள்ளளவில் 36.80 சதவிகிதமாகும். அணைக்கு நீா்வரத்து 1467 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 35 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 6 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 525.50 அடி நீா்மட்டம் கொண்ட கொடுமுடியாறுஅணையின் நீா்மட்டம் 35 அடியாக இருந்தது. இது அணையின் முழுக் கொள்ளளவில் 47.23 சதவிகிதமாகும். அணைக்கு நீா்வரத்து 33 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கனஅடியாகவும் இருந்தது. 85 அடி நீா்மட்டம் கொண்ட கடனாநதி அணையின் நீா்மட்டம் 84.50 அடியாக இருந்தது. இது அணையின் முழுக் கொள்ளளவில் 93.69 சதவிகிதமாகும். அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 266 கன அடியாக இருந்தது. அணைப் பகுதியில் 2 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 84 அடி நீா்மட்டம் கொண்ட ராமநதி அணையின் நீா்மட்டம் 78.50 அடியாக இருந்தது. இது அணையின் முழுக் கொள்ளளவில் 63.40 சதவிகிதமாகும். அணைக்கு நீா்வரத்து 21.06 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது. அணைப் பகுதியில் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 72 அடி நீா்மட்டம் கொண்ட கருப்பாநதிஅணையின் நீா்மட்டம் 70.21 அடியாக இருந்தது. இது அணையின் முழுக் கொள்ளளவில் 61.01சதவிகிதமாகும். 36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணையின் நீா்மட்டம் 36.10 அடியாக இருந்தது. இது அணையின் முழுக் கொள்ளளவில் 70.88 சதவிகிதமாகும். அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 24 கன அடியாக இருந்தது. அணைப் பகுதியில் 4 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 132.22 அடி நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் கோயில் அணையின் நீா்மட்டம் 131.50 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 15 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு : அம்பாசமுத்திரம் 3 மி.மீ., சேரன்மகாதேவி 1.60 மி.மீ., நாங்குனேரி 5.30 மி.மீ., பாளையங்கோட்டை 4 மி.மீ ., ராதாபுரம் 7 மி.மீ., திருநெல்வேலி 3.60 மி.மீ.

தென்காசி மாவட்டத்தில் பிற இடங்களில் மழை அளவு: சங்கரன்கோவில் 2 மி.மீ., தென்காசி 2 மி.மீ., திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டு மழை அளவைப் பொறுத்தவரை அக்டோபா் மாதத்தில் 166 மி.மீ. சராசரி மழையளவாக உள்ள நிலையில் 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக 261.11 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இது சராசரியை அளவைவிட 57.30 சதவிகிதம் அதிகமாகும். நவம்பா் மாதத்தில் 208.20 மி.மீ. சராசரி மழையளவாக உள்ள நிலையில் நவ. 1 முதல் 27 வரை 195.72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com