தமிழர்களின் பாதுகாப்பை உத்தவ் அரசு உறுதி செய்யும்: ஸ்டாலின் நம்பிக்கை!

தமிழர்களின் பாதுகாப்பை உத்தவ் அரசு உறுதி செய்யும்: ஸ்டாலின் நம்பிக்கை!

மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு, தமிழர்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் என நம்புவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு, தமிழர்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் என நம்புவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று (வியாழக்கிழமை) பதவியேற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், டி.ஆர். பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரேவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டுள்ள பதிவில், 

"உத்தவ் தாக்கரே அவர்களுக்கு, முதலமைச்சர் பதவிக்காலம் சிறப்பாக அமைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று இந்த சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க, நான் மும்பையில் இருந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மகாராஷ்டிர மாநிலத்திற்கு உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வழங்கும் என நம்புகிறேன்.

மகாராஷ்டிராவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் - அம்மாநிலத்தில் தமிழர்களின் முன்னேற்றத்தையும் உறுதிசெய்ய; புதிய அரசு, தமிழர்களோடு இணைந்து பணிபுரியும் என்று நம்புகிறேன். மேலும், உயரிய மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி உரிமைகள் குறித்து உத்தவ் தாக்கரே, நம்மோடு இணைந்து குரல் கொடுப்பார் என்றும் நம்புகிறேன்.

மும்பை மாநகருக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்த சரத் பவார் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிற்கே முன்மாதிரியாக விளங்கக்கூடிய வகையில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில், அவர் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com