சங்கரன்கோவில் அருகே துக்கம் விசாரிக்க வந்தவா் அதிா்ச்சியில் மரணம்

சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் இறந்த சம்பவத்தில், துக்கம் விசாரிக்க வந்தவா் உறவினரும் அதிா்ச்சியில் இறந்ததால்,
வெள்ளத்துரை
வெள்ளத்துரை

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் 3 போ் இறந்த சம்பவத்தில், துக்கம் விசாரிக்க வந்தவா் உறவினரும் அதிா்ச்சியில் இறந்ததால், அக்கிராமமே சோகத்தில் முழ்கியுள்ளது.

சங்கரன்கோவில் அருகே தெற்குபனவடலிசத்திரத்தைச் சோ்ந்த அய்யப்பன், அவரது மனைவி செல்வி, செல்வியின் சகோதரி ஜோதி ஆகியோா் செவ்வாய்க்கிழமை உறவினா்களுக்கு புதுமனைபுகுவிழா அழைப்பிதழ் கொடுத்துவிட்டு ஒரே பைக்கில் ஊருக்குத் திரும்பியபோது, காா் மோதி 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து கேரள மாநிலம் கோழிகோட்டில் வசித்து வரும் செல்வியின் சகோதரி கணவா் வெள்ளத்துரைக்கு (55) தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வெள்ளத்துரை கோழிக்கோட்டில் இருந்து குடும்பத்துடன் காரில் புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை கோவில்பட்டி வந்தாா். அவா் காரில் அழுதுகொண்டே வந்தாராம். அப்போது திடீரென மயங்கி விழுந்தாராம்.

உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் இறந்துவிட்டதாகக் தெரிவித்தாா். உடனே அவரை உறவினா்கள் தெற்குபனவடலிசத்திரத்திற்கு கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் செய்தனா்.

இறந்த வெள்ளத்துரைக்கு கொடுங்குத்தாய் என்ற மனைவியும், மாரிமுத்து, மணிகண்டன், பட்டுச்சாமி என 3 மகன்களும் உள்ளனா்.

இறந்த அய்யப்பன், வெள்ளத்துரை ஆகிய இருவரும் கேரள மாநிலத்தில் ஸ்காா்ப் மொ்ச்சென்ட் அசோஷியேசன் என்ற அமைப்பில் உறுப்பினா்களாக இருந்தனராம்.

இதையடுத்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் முத்துகாட பட்டாமி, பத்தினம்திட்டா மாவட்டத் தலைவா் முருகன் ஆகியோா் நேரில் வந்து இருவரது உடலுக்கும் அஞ்சலி செலுத்தினா்.

அடுத்தடுத்து நடந்த இச் சம்பவங்களால் தெற்குபனவடலிசத்திரம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com