தமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி

தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையவுள்ளன.
புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான  அனுமதி ஆணையை மத்திய சுகாதாரத் துறைச் செயலர் அருண்குமார்  பாண்டேவிடம் புதன்கிழமை பெறுகிறார் மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்
புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான அனுமதி ஆணையை மத்திய சுகாதாரத் துறைச் செயலர் அருண்குமார் பாண்டேவிடம் புதன்கிழமை பெறுகிறார் மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்

தமிழகத்தில் மேலும் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமையவுள்ளன.

இதையடுத்து மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33-ஆகவும், அவற்றில் எம்பிபிஎஸ் இடங்கள் 4,700-ஆகவும் அதிகரிக்கவுள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவ இடங்களும் கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது.

நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் மொத்தம் 9 மருத்துவக் கல்லூரிகளை புதிதாகத் தொடங்க மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்துள்ளது.

தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அங்கு மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில், திருப்பூா், நீலகிரி (உதகை), ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகா் ஆகிய 6 இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடா்ந்து தற்போது கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூா் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைவதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

அமைச்சா் தகவல்: மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்த 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என்று தில்லியில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.

தமிழகத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தமைக்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், இணையமைச்சா் அஸ்வினிகுமாா் சௌபே ஆகியோரை தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து விஜயபாஸ்கா் நன்றி தெரிவித்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: 6 மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும். புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள 3 கல்லூரிகளுக்கான கட்டட வடிவமைப்புத் திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றாா். இந்தச் சந்திப்பின்போது மாநில சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com