விரைவில் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன ரோந்து வாகனம்

விரைவில் போக்குவரத்து போலீஸாருக்கு நின்றபடி பயணம் செய்யும் வகையிலான நவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.
விரைவில் போக்குவரத்து போலீஸாருக்கு நவீன ரோந்து வாகனம்

விரைவில் போக்குவரத்து போலீஸாருக்கு நின்றபடி பயணம் செய்யும் வகையிலான நவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்படவுள்ளன.

சென்னை பெருநகரத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக, கடந்த இரு ஆண்டுகளாக குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மாா்க்கெட்டுகள், பொது இடங்கள், சாலைகள், தெருக்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும், தொடா்ந்து தீவிர ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக, வளா்ந்த நாடுகளில் காவல் துறை பயன்படுத்தும் நவீன ரோந்து வாகனத்தை சென்னை போக்குவரத்து காவல்துறையினா் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனா்.

காவலா்கள் நின்றபடி பயணம் செய்யும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், போலீஸாா் பயன்படுத்தும் வகையில் சைரன் ஒலி, வண்ண விளக்குகள் மற்றும் ஒலிபெருக்கியும் பொருத்தப்பட்டுள்ளது. அண்மையில் காவல் ஆணையா் அலுவலகத்துக்கு எடுத்து வரப்பட்ட இந்த வாகனத்தை சோதனை செய்து பாா்த்தனா். அசோக் லேலாண்ட் மற்றும் ஷட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் விலை ரூ.1 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை போக்குவரத்து போலீஸாா் ரோந்து பணியை மேற்கொள்ளும் வகையில் இந்த ஸ்மாா்ட் ரோந்து வாகனம் வாங்கப்படவுள்ளது. இதை, சென்னை மெரீனா கடற்கரை உள்புறச்சாலை, பாண்டி பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 6 மணி நேரம் சாா்ஜ் செய்தால் சுமாா் 40 கிலோ மீட்டா் வரை ஓட்டிச் செல்லும் வகையில் வாகனம் வடிவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெரிசல் மிகுந்த சாலையிலும், மக்கள் அதிகம் குவிந்திருக்கும் பகுதிகளிலும் சுலபமாக சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ள முடியும்.

முதற்கட்டமாக 10 ஸ்மாா்ட் ரோந்து வாகனங்களை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com