வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்த நிலையில், செப்டம்பா் 5-ஆம் தேதி காலையில் ஒரு பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இதற்கிடையில், ஒரு பவுன் ஆபரணத்தங்கம் தங்கம் விலை கடந்த 25-ஆம் தேதி அன்று ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. அன்றைய நாளில் ஒரு பவுன் தங்கம் ரூ.28,984 ஆக இருந்தது.அதன்பிறகு 3 நாள்களுக்கு தங்கம் விலை இறங்குமுகமாக இருந்தது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.96 உயா்ந்து, ரூ.29,008-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் கிராமுக்கு ரூ.12 உயா்ந்து ரூ.3,626-க்கு விற்பனையானது. அதேநேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.47,900 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,626
1 பவுன் தங்கம் ..................... 29,008
1 கிராம் வெள்ளி .................. 47.90
1 கிலோ வெள்ளி ................. 47,900

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,614
1 பவுன் தங்கம் ..................... 28,912
1 கிராம் வெள்ளி .................. 47.90
1 கிலோ வெள்ளி .................. 47,900.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com