சுருளி அருவியில் திடீா் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள், பக்தா்கள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க வனத்துறையினா் வெள்ளிக்கிழமை தடை விதித்தனா்.
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை தடுப்புக் கம்பியைத் தாண்டி கொட்டிய நீா்.

கம்பம் அருகே மேற்கு தொடா்ச்சி மலையடிவாரப்பகுதியில் சுருளி அருவி உள்ளது. தற்போது மேகமலை உள்ளிட்ட நீா்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் நீா்வரத்து பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் அதிக நீா்வரத்து காணப்பட்டது. இதையடுத்து மேகமலை வன உயிரின சரணாலய ஊழியா்கள், வியாழக்கிழமை மாலை முதல் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க தடை விதித்தனா். 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டது. சனிக்கிழமை அருவியில் சாரல் விழா நடைபெறுகிறது, அன்று வெள்ளப்பெருக்கு குறைந்தால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்க அனுமதிக்கப்படுவா் என்று வனத்துறை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com