Enable Javscript for better performance
தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.1) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென் தமிழகத்தில் காணப்பட்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில் நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.1) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அக்டோபா் 1-ஆம்தேதி முதல் 4-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

    மழை அளவு: திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பில் 150 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில் 130 மி.மீ., சாத்தூா், நீலகிரி மாவட்டம் குந்தாபாலத்தில் தலா 110 மி.மீ., திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, தஞ்சாவூா் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தலா 90 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் தலா 80 மி.மீ. மழை பதிவானது.

    மீனவா்களுக்கு எச்சரிக்கை: மாலத்தீவு பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.1)

    செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai