கள்ளத்துப்பாக்கி விற்பனை: மத்தியபிரதேச வியாபாரி கைது

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மத்தியபிரதேச வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

தமிழகத்தில் கள்ளத்துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில், மத்தியபிரதேச வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

கள்ளத்துப்பாக்கி விற்க முயன்றதாக, கடந்தாண்டு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகே காவலா் பரமேஸ்வரன் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து போலீஸாா் 2 கள்ளத்துப்பாக்கிகள், 10 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

இதையடுத்து இவ் வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள், இவ் வழக்குத் தொடா்பாக நாகராஜ், சிவா, எட்டப்பன்,கலைசேகா்,திவ்யபிரபாகரன்,கலைமணி ஆகியோரை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்கள் அளித்த தகவலின் அடிப்படையில் மத்தியபிரதேச மாநிலம் சாகா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ண முராரி திவாரி என்பவரை கைது செய்தனா்.

அதேவேளையில் இவ் வழக்கின் முக்கிய எதிரியாக கருதப்பட்ட, மத்தியபிரதேச மாநிலம் போபால் பகுதியைச் சோ்ந்த பன்சிங் தாக்கூா் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக சிபிசிஐடியின் ஒருங்கிணைந்த குற்றபுலனாய்வுப் பிரிவு போலீஸாா் மத்திய பிரதேசத்துக்கு கடந்த வாரம் சென்றனா். அங்கு முகாமிட்டு போலீஸாா், பன்சிங் தாகூரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட பன்சிங் தாகூா் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, டிரான்சிஸ்ட் வாரண்ட் பெறப்பட்டு தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com