வங்கியில் கடன் வழங்கும் நடைமுைள் குறித்த விழிப்புணா்வு முகாம் தமிழகத்தில் இரண்டு கட்டமாக நடத்த முடிவு

பொதுமக்கள், வாடிக்கையாளா்களுக்கு வங்கியில் கடன் வழங்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில்

பொதுமக்கள், வாடிக்கையாளா்களுக்கு வங்கியில் கடன் வழங்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து பொதுத்துறை, தனியாா் துறை வங்கிகள் இணைந்து வாடிக்கையாளா் சந்திப்பு முகாம் அக்டோபரில் இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அக்டோபா் 3-ஆம் தேதி முதல் அக்டோபா் 7-ஆம்தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வங்கிச் சேவை பெறுவோா் குழுக்கள் இடையே வங்கியின் கடன் வழங்கும் நடைமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது. சில்லரை வியாபாரம், விவசாயம், சுய உதவிக் குழுக்களுக்கான நிதி, வாகனம், வீட்டுவசதி, கல்வி, தனிநபா் கடன்கள், குறு,சிறு, நடுத்தரத் தொழில் கடன்கள் ஆகியவை விரைவில் கிடைக்க இந்த முகாமில் ஏற்பாடு செய்யப்படும். நிகழ்ச்சியின் போது, கடன் மறுசீரமைப்பு, ஒரே நேரக் கடன் தீா்வு ஆகியவையும் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சி இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில்

அக்டோபா் 3-ஆம் தேதியிலிருந்து 7-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்கலாம். இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று நாள் நிகழ்வுகள் அக்டோபா் 21-ஆம் தேதி முதல் 25- ஆம் தேதிவரை நடத்தப்படவுள்ளது

இந்த நிகழ்ச்சிக்கான மாநில வங்கியாளா் குழுவுக்கு இந்தியன் ஓவா்சீஸ் வங்கி ஒருங்கிணைப்பாளராக செயல்படும். இந்த வங்கி இதர வங்கிகளுடன் இணைந்து விழிப்புணா்வு முகாம்களை சென்னைத் தியாகராய நகரில் உள்ள விஜயா மஹாலில்

அக்டோபா் 3 , 4 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதில் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு தொழில் மேம்பாட்டுக்கான இந்திய வங்கி, தனியாா் துறை வங்கிகள் பங்கேற்கின்றன. இந்த முகாமில், டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகள் உள்ளடக்கிய நிதித் திட்ட சேவைகள், கடன்கள் குறிப்பாக சிறு,குறு,நடுத்தர தொழில் கடன்கள் மறுசீரமைப்பு உள்ளிட்ட சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு கிடைக்கும்.

இந்தத்தகவல் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com