வாரிசு அரசியல் சரியாக இருக்காது: கமல்ஹாசன்

வாரிசு அரசியல் சரியாக இருக்காது என்பதற்காகத்தான் ஜனநாயகம் வந்தது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.


வாரிசு அரசியல் சரியாக இருக்காது என்பதற்காகத்தான் ஜனநாயகம் வந்தது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சென்னையில் லயோலா கல்லூரியில் செவ்வாய்க்கிழமை மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியது:
அரசியல் பேசுவதில் இருந்து மாணவர்கள் விலகி நிற்கக் கூடாது. கரை வேட்டிக் கட்டியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று மாணவர்கள் ஒதுங்கி நிற்பதால்தான் கறை படிந்துள்ளது. மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
அரசியலில் ஒற்றை அறிவு, ஒற்றை முடிவு என்று இல்லாமல் பன்முகத்தன்மை உடையதாக இருக்க வேண்டும். அரசியலில் வாரிசு அரசியல் சரியாக இருக்காது. அதற்காகத்தான் ஜனநாயகம் வந்தது. ஆனால், தமிழக அரசியலில் குடும்ப அரசியலைப் பிரிக்க முடியாது. அதனால்தான் மாணவர்களுடன், மக்களுடன் சேர்ந்து எனது குடும்பத்தைப் பெரிதாக்கிக் கொள்கிறேன். தமிழ் மீதான நமது உணர்வு உள்ள வரை தமிழ் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றார். 
கிராம சபை கூட்டத்தில் கமல்: காந்தி பிறந்த நாளையொட்டி புதன்கிழமை பழவேற்காட்டில் நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்தில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com