மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் | கோப்புப்படம்
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் | கோப்புப்படம்

ஹிந்தி மொழி டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை: கமல்ஹாசன்

ஹிந்தி மொழிய டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


ஹிந்தி மொழிய டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மநீம தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார். அப்போது ஹிந்தி மொழி குறித்து பேசிய அவர், 

"ஹிந்தி மொழி டயாப்பருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடுகையில், ஹிந்தி மொழி இன்னும் இளைய மொழிதான். இதை நான் ஏளனமாகக் கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன். அதற்காக அதைத் திணிக்கக் கூடாது" என்றார்.

முன்னதாக, கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி ஹிந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் ஒரு விடியோ வெளியிட்டார். அதில், "ஹிந்தி மொழியைத் திணித்தால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட பன்மடங்கு பெரிதான போராட்டம் நடைபெறும்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com