சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட இல்லை, அதற்குள் அடுத்த பேனர்: மு.க. ஸ்டாலின் விமரிசனம் 

சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தராமல், அடுத்த பேனருக்கு அனுமதி வாங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உயர்நீதிமன்றம் நாடுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.  
நன்றி: டிவிட்டர் | ஸ்டாலின்
நன்றி: டிவிட்டர் | ஸ்டாலின்


சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தராமல், அடுத்த பேனருக்கு அனுமதி வாங்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உயர்நீதிமன்றம் நாடுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமரிசித்துள்ளார்.  

சீன அதிபர் ஜின்பிங் - பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை முன்னிட்டு, இருவரையும் வரவேற்று பதாகை வைக்க அனுமதி கோரி அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பொது மக்களுக்கு இடையூறின்றி பதாகைகள் வைக்க இன்று அனுமதியளித்தது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் இதுதொடர்பாக டிவீட் செய்துள்ளார். அதில்,

"அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்குக் காரணமாக அ.தி.மு.க கட்சி, அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை. அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி!

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம்! வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை!" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com