அண்ணா பல்கலை.யில் தத்துவப்படிப்பில் பகவத்கீதை: கிரண் பேடி வரவேற்பு 

அண்ணா பல்கலை.யில் பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
துணைநிலை   ஆளுநர் கிரண்பேடி
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: அண்ணா பல்கலை.யில் பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT,CEG,ACT மற்றும் SAP வளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவப்பாடப் படிப்பு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு  எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு திமுக,மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கணடனம் தெரிவித்தன.

இந்நிலையில் அறிவிப்பிற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து பகவத் கீதையை  விருப்பப் பாடமாக மாற்றியுள்ளதாக பின்னர் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா அறிவித்தார்.

இந்நிலையில் அண்ணா பல்கலை.யில் பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூறும்போது அவர், 'பகவத்கீதை என்பது எல்லா மதத்தினருக்கும் பொதுவானது;ஒரு மதத்தை குறிப்பிட்டு கூறுவது தவறு. அண்ணா பல்கலை.யில் பகவத்கீதையை தத்துவப்படிப்பில் இணைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு மனிதனுடைய வாழ்வாதாரத்தையும், புரிதலையும் தெரிந்துகொள்ள பகவத்கீதைஉதவும்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com