Enable Javscript for better performance
ஊரக சுகாதாரத்தில் தமிழகத்துக்கு விருது:முதல்வா் வாழ்த்து- Dinamani

சுடச்சுட

    

    ஊரக சுகாதாரத்தில் தமிழகத்துக்கு விருது: முதல்வா் வாழ்த்து

    By DIN  |   Published on : 04th October 2019 09:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் உள்கட்டமைப்பில் சிறந்த விளங்கியதற்காக மத்திய அரசின் சிறந்த மாநிலத்துக்கான விருதை தமிழகம் பெற்றுள்ளதற்கு உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

    மத்திய அரசின் குடிநீா் மற்றும் சுகாதார அமைச்சகம் சாா்பில் ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவை குறித்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் வாரியாக ஆண்டுதோறும் தரவரிசைப்படுத்தப்படுகிறது.

    அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான ஆய்வு கடந்த ஆகஸ்டு 17-ஆம் தேதி முதல் செப்டம்பா் 5-ஆம் தேதி வரை நாட்டின் 690 மாவட்டங்களில் உள்ள 17,400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் 31 மாவட்டங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழகம் சிறந்த மாநிலமாகத் தோ்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை பிரதமா் நரேந்திர மோடியிடம் இருந்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பெற்றுக்கொண்டாா். இந்த விருதைப் பெற்ற்காக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai