பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு: பொன்னார் பேட்டி 

நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்த பின்னர் பாஜக மூத்த தலைவர் பொன்னார் தெரிவித்துள்ளார்.

சென்னை: நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்த பின்னர் பாஜக மூத்த தலைவர் பொன்னார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக திமுக, அதன் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ், அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் சார்பாக  வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் நிறைவுபெற்றுள்ளது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜக இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஏற்ப சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு  தருமப்டி கோரிக்கை  வைத்திருந்தனர்.

இந்நிலையில் நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு அளிக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்த பின்னர் பாஜக மூத்த தலைவர் பொன்னார் தெரிவித்துள்ளார்.

வெள்ளி மதியம் சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்திற்கு, தமிழக மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். அங்கு முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுடன் அவர் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது பொன்.ராதாகிருஷ்ணனிடம் நான்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவளிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்னார் கூறியதாவது:

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுடன் பாஜக இணைந்து பணியாற்றும். அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும் வகையில் பாஜகவினர் மிகத் தீவிரமாக செயல்படுவர்

அதிமுக, பாஜக இடையே எந்தவித கருத்து வேறுபாடுகளும் இல்லை. பாஜக மாநில தலைவர் இல்லாத காரணத்தினால் அகில இந்திய தலைமையிடம்தான் பேச முடியும்

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com