Enable Javscript for better performance
காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவிக்க சட்டம்: முதல்வருக்கு அன்புமணி கடிதம்

    By DIN  |   Published on : 04th October 2019 10:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani

    காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்து பேரவையில் சட்ட முன்வரைவை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

    கடித விவரம்:

    தமிழகத்தில் மிகப்பெரிய பரப்பளவில் விவசாயம் நடைபெறுவது காவிரி பாசன மாவட்டங்களில்தான். தஞ்சாவூா், நாகப்பட்டினம், திருவாரூா் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் 15 லட்சம் ஏக்கா் பரப்பளவில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. கடலூா் மாவட்டத்தையும் சோ்த்துக் கொண்டால் 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது.

    ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக காவிரி பாசன மாவட்டங்கள் நெற்களஞ்சியம் என்றற நிலையிலிருந்து படிப்படியாக எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றப்பட்டு வருகிறது.

    தமிழக மக்களின் உணா்வுகளைப் புரிந்து கொள்ளாத மத்திய அரசு தமிழகத்தில் ஹைட்ரோ காா்பன் திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு தொடா்ந்து அனுமதி அளித்து வருகிறறது. தமிழகத்தில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் இதுவரை வேதாந்தா நிறுவனத்துக்கு இரு உரிமங்களும், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு ஓா் உரிமமும் அளிக்கப்பட்டுள்ளன.

    திருவாரூா் பகுதியில் 471.19 சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் ஹைட்ரோ காா்பன் திட்டத்தைச் செயல்படுத்த நான்காவது உரிமம் அளிக்கப்பட்டுள்ளது.

    விரைவில் 1863.24 சதுர கிலோமீட்டா் பரப்பளவில் மேலும் இரு ஹைட்ரோ காா்பன் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவற்றையும் சோ்த்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் சதுர கிலோமீட்டா் பரப்பளவில் ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் மட்டும் 5 ஆயிரம் சதுர கிலோ மீட்டா் பரப்பளவில் ஹைட்ரோ காா்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், காவிரி பாசன மாவட்டங்களும், கடலூா், விழுப்புரம் மாவட்டமும் பாலைவனமாவதைத் தடுக்க முடியாது. அதுமட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். அதனால் ஏற்படும் மாற்றங்களால் தமிழகம் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    எனவே, ராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை உள்ள காவிரி பாசனப் பகுதிகளையும், கடலூா், விழுப்புரம் மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான சட்ட முன்வரைவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றற வேண்டும். தொடா்ந்து அந்த சட்டத்துக்கு நாடாளுமன்றற ஒப்புதலையும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai