திருச்சி கொள்ளைக்கு சீரியல்தான் இன்ஸ்பிரேஷனாம்! கொள்ளைக் கூட்டத் தலைவன் பற்றிய திகிலூட்டும் தகவல்கள்

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டன் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டுவதற்காக, நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்.
திருச்சி கொள்ளைக்கு சீரியல்தான் இன்ஸ்பிரேஷனாம்!
திருச்சி கொள்ளைக்கு சீரியல்தான் இன்ஸ்பிரேஷனாம்!

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டன் கொள்ளையடிப்பதற்குத் திட்டம் தீட்டுவதற்காக, நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான க்ரைம் தொடர்களுள் ஒன்று 'மணி ஹீஸ்ட்' (Money heist). 'லா காசா டி பேபல்' என்ற ஸ்பானிஷ் பெயரில் வெளியாகியுள்ள இந்த சீரிஸ், ஸ்பெய்னின் மத்திய வங்கியைக் கொள்ளையடிக்க கும்பலாகத் திட்டமிடுவதும், கொள்ளையடிப்பதும் தொடர்பான கதையைக் கொண்டது. இந்தத் தொடர் உலகம் முழுவதும் வங்கிக் கொள்ளையர்களிடையே பிரபலமாக உள்ளது.

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்ட 'திருவாரூர்' முருகன் இந்தத் தொடரை அதிகமாகப் பார்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார் எனக் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் பிடிபட்ட மணிகண்டன்.

கொள்ளையடித்த நகைகளுடன் மணிகண்டன் சிக்கியது தொடர்பாகக் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ரவுடிகள் மற்றும் கிரிமினல்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார், சிசிடிவி காட்சிகள் மூலமாகத் திருடர்கள் அணிந்திருந்த சாதாரண செருப்பு, அவர்களின் கால் நிறம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, இந்தத் திருட்டை வடமாநிலக் கொள்ளையர்கள் செய்யவில்லை எனவும், இது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் கைவரிசைதான் எனவும் கண்டுபிடித்துள்ளார்.

பிடிபட்டுள்ள மணிகண்டன், `` எங்களுக்கெல்லாம் பாஸ் 'திருவாரூர்' முருகன் தான். 'மணி ஹீஸ்ட்' தொடரில் வரும் புரொஃபசரைப் போல, முருகனும் நடமாடும் வேனிலேயே வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருப்பவர்" எனத் தெரிவித்திருக்கிறார்.

'திருவாரூர்' முருகன் சுவரில் துளையிட்டுத் திருட்டுச் சம்பவங்களை நிகழ்த்துவதில் பிரபலமானவர். தற்போது உடல்நிலை குன்றியநிலையில் இருக்கும் முருகன் நடமாட முடியாத சூழலில் இருக்கிறார். நடமாடும் வேன் ஒன்றில் வாழ்ந்து வரும் முருகனைப் பிடிக்க, தமிழக காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது.

'Money heist' பாணியில், வெளியில் இருந்து உதவும் புரொஃபசர், திருடர்களின் உடை, முகமூடி, சுவரில் துளை எனப் பல்வேறு ஒற்றுமை அம்சங்களைக் கொண்டுள்ளது இந்தத் திருட்டுச் சம்பவம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com