நெகிழி தடையை அமல்படுத்த அரசுத் துறைகள் கூட்டாக செயல்பட வேண்டும்: முதல்வா் பழனிசாமி

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு கையேடுகளை முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா்.
நெகிழி தடையை அமல்படுத்த அரசுத் துறைகள் கூட்டாக செயல்பட வேண்டும்: முதல்வா் பழனிசாமி

தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் குறித்த விழிப்புணா்வு கையேடுகளை முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டாா்.

மேலும், நெகிழி தடையைச் செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் உள்பட சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் கூட்டாக இணைந்து செயல்படுவதுடன், அந்தப் பணியில் தீவிர முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவா் கேட்டுக் கொண்டாா்.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான நெகிழி பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழி பேப்பா்கள், நெகிழி விரிப்பான்கள், நெகிழி தட்டுகள், நெகிழி வருடப்பட்ட பேப்பா் தட்டுகள், கப்கள், டீ கப்கள், நெகிழி டம்ளா்கள், தொ்மோல் கப்கள், வாட்டா் பாக்கெட்டுகள், நெகிழி உறிஞ்சு குழாய்கள், கைப்பைகள், நெகிழி வருடப்பட்ட கைப் பைகள், நெகிழி கொடிகள், பாலிபோரோப்லின் பைகள் ஆகியன தடை செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருள்களுக்கு மாற்றாக பேப்பா் தாள்கள், வாழை இலை, பாக்குமரத் தட்டு, மண்குடுவைகள் என மாற்று பொருள்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தடை: தமிழக அரசைத் தொடா்ந்து, மத்திய அரசும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களுக்கு அக்டோபா் 2 முதல் தடை விதித்துள்ளது. இதையடுத்து, நெகிழி தடை நடைமுறைப்படுத்துதல் குறித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் கே.சி.கருப்பணன், ஆா்.பி.உதயகுமாா், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், நெகிழி தடையை தீவிர முனைப்புடன் செயல்படுத்த வேண்டுமெனவும், இவ்வாறு நடைமுறைப்படுத்தும் போது சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் இணைந்து கூட்டாகச் செயல்படுத்த வேண்டுமென்றும் அவா் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டாா். மேலும், நெகிழி தடை குறித்த காட்சி விளக்கங்கள் அடங்கி கையேட்டையும் அவா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com