"மதுக்கடைகளை அரசு எடுத்து நடத்துவதே அதை மூடத்தான்!"- ஜெகன்மோகனின் அதிரடி பிளான்

ஆந்திராவில் 3,448 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தவுள்ளது. ஓராண்டு முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூட அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். 
ஜெகன்மோகனின் அதிரடி பிளான்
ஜெகன்மோகனின் அதிரடி பிளான்

ஆந்திராவில் 3,448 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தவுள்ளது. ஓராண்டு முடிவதற்குள் அனைத்து மதுக்கடைகளையும் மூட அந்த மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். 

இதுகுறித்து ஆந்திர துணை முதல்வர் கே.நாராயணசாமி கூறுகையில், ``கடந்த மே மாதம் 30-ம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார்.

அப்போதிலிருந்து, அனுமதியில்லாமல் செயல்பட்ட 43,000 மதுக்கடைகளை மூடினோம். மாநிலத்திலிருந்து மதுவை முற்றிலும் அகற்றும் வகையில், பரிட்சார்த்தமாக 475 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தியது. இப்போது, அனைத்துக் கடைகளையும் அரசு நடத்தப்போகிறது. பின்னர், படிப்படியாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மாநிலத்திலிருந்து முற்றிலும் மதுவிலக்குக் கொண்டுவரப்படும்.

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது பிரசாரத்தின்போது, மக்களுக்கு அளித்த வாக்குறுதி இது. தெலுங்கு தேச அரசு சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையைத் தடுக்கத் தவறிவிட்டது. இதனால், ஆந்திராவில் மது அருந்தும் போக்கு அதிகரித்து, லட்சக்கணக்கானோர் உயிரை இழந்துள்ளனர். இதனால், பெண்கள் மதுக்கடைகளை மூடவேண்டுமென்று முதல்வரிடத்தில் கோரிக்கை வைத்தனர். மக்களின் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி மது இல்லாத மாநிலமாக ஆந்திராவை மாற்றுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏ.பி.பிவரேஜஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஆந்திராவில் செயல்படும் 3,448 கடைகளையும் குத்தகைக்கு எடுத்து நடத்தும். முதலில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மதுக்கடைகள் செயல்படும். பின்னர் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை என மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்படும். 3,500 மேலாளர்கள் 8,000 விற்பனையாளர்கள் பணிக்கு எடுக்கப்படுவார்கள்.

மதுக்கடைகளை நிரந்தரமாக மூடும் வரை இவர்கள் கண்காணிப்பில் மதுக்கடைகள் நடத்தப்படும். இரவு நேரத்தில் மது விற்பனையைத் தடுப்பதற்காக ஒவ்வொரு மதுக்கடைக்கும் காவலாளிகள் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு மாவட்டத் தலைமை மருத்துவமனையிலும் மது மீட்பு மையம் அமைக்கப்படவுள்ளது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com