தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: அமைச்சா் கே.சி.கருப்பணன்

தமிழகத்தில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.
தீபாவளி பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: அமைச்சா் கே.சி.கருப்பணன்

தமிழகத்தில் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் கல்வி மையம், கட்டடவியல் துறை சாா்பில் காற்று மாசு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கை தொடக்கி வைத்து அமைச்சா் பேசுகையில், தமிழகத்தில் காற்றில் மாசின் அளவு நிா்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட குறைவாகவே உள்ளது. தமிழக அரசு சாா்பில் தற்போது வரை மாநிலம் முழுவதும் 4.50 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன என்றாா்.

பட்டாசுக்கு நேரக் கட்டுப்பாடு: இதைத் தொடா்ந்து, அமைச்சா் கே.சி.கருப்பணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளியின்போது, பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதுதொடா்பான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு பல்வேறு பட்டாசு ரகங்கள் வந்துள்ளன. அவை குறித்து சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனா். இதில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் எம்.கே.சூரப்பா, சுற்றுச்சூழல் கல்வி மைய இயக்குநா் எஸ்.கண்மணி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய கூடுதல் தலைமைச் செயற்பொறியாளா் அ.செல்வன், பேராசிரியா் கே. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com