மாத்திரையில் கம்பி; பீதியை கிளப்பும் அரசு மருந்துகள்! மாத்திரையை உடைக்காமல் போயிருந்தால்?!

ஏற்கனவே கோவையில் பல் வலிக்கு வழங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து விலகாத நிலையில், மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
மாத்திரையில் கம்பி
மாத்திரையில் கம்பி

ஏற்கனவே கோவையில் பல் வலிக்கு வழங்கிய மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்த விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து விலகாத நிலையில், மீண்டும் அதுபோன்றதொரு சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

போகும் உயிர் வீட்டிலேயே போகட்டும் என்று அந்தக்கால மனிதர்களைப் போல நம்மையும் நினைக்க வைத்து விடுவார்கள் போல இதுபோன்ற இரும்புக் கம்பி நிறைந்த மாத்திரைகளைக் கொடுத்து.

சேலம் மாவட்டத்தில் சிறுமிக்கு வழங்கிய மாத்திரையில், கம்பி இருந்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், புள்ளிப்பாளையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, நேற்று முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி, மோரூர் மேற்கு ஊராட்சியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 29; ஓட்டுனர். இவரது, 6 வயது பெண் குழந்தைக்கு சளி, காய்ச்சல் பாதிப்பு இருந்தது.

இதனால், கடந்த, 1ல், புள்ளிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சிறுமியை அழைத்துச் சென்றார்.

அங்கு, சிறுமியை பரிசோதித்த டாக்டர், மூன்று மாத்திரைகளை கொடுத்தார். நேற்று முன்தினம் வரை, இரு மாத்திரையை, சிறுமிக்கு கொடுத்து உள்ளனர்.நேற்று காலை, மீதமுள்ள ஒரு மாத்திரையை, சிறுமி விழுங்க மறுத்தார். இதனால் பெற்றோர், அந்த மாத்திரையை உடைத்து கொடுக்க முயன்றனர். அப்போது மாத்திரைக்குள், சிறு கம்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, நேற்று காலை, 11:30 மணிக்கு, சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், புள்ளிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

டாக்டர் தனசேகரன், அவர்களுடன் பேச்சு நடத்தினார். அப்போது, உயரதிகாரிகளுக்கு, மாத்திரையில் கம்பி இருந்ததை தெரிவித்து, உரிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இதில் இரண்டு விஷயங்கள்தான் அதிர்ச்சியை தருகின்றன.
ஒன்று.. அந்த சிறுமி முதலில் போட்ட மாத்திரையில் இதே கம்பி இருந்திருந்தால்?
இரண்டு.. இந்த மாத்திரையை சிறுமி உடைக்காமல் போட்டிருந்தால்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com