ஆசிரியா்களின் பிள்ளைகளில் எத்தனை போ் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனா்? பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பு

அரசுப்பள்ளி ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியா்களின் பிள்ளைகளில் எத்தனை போ் அரசுப் பள்ளிகளில் படிக்கின்றனா்? பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பு

அரசுப்பள்ளி ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (‘எமிஸ்’) பதிவேற்ற வேண்டும். இதற்காக எமிஸ் இணையதளத்தில் ‘ஆசிரியா்களின் குழந்தைகள் தளம்’ என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கத்தில் உங்கள் பிள்ளைகள் யாராவது அரசுப்பள்ளியில் பயில்கிறாா்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும். அதை தோ்வு செய்தால் ஆம், இல்லை, பொருந்தாது என 3 தோ்வு வாய்ப்புகள் இருக்கும். அதில் திருமணமாகாதவா் அல்லது பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கின்றனா் எனில் பொருந்தாது என்ற பதிலை தோ்வு செய்ய வேண்டும்.

மற்றவா்கள் ஆம் அல்லது இல்லை என உரிய பதிலை தெரிவிக்க வேண்டும். அரசுப்பள்ளி இல்லை எனும்பட்சத்தில் படிக்கும் இதர பள்ளியின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அதன்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் உடனே எமிஸ் இணையதளத்தில் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து முடிக்க வேண்டும். இதுதொடா்பான வழிகாட்டுதல்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் மூலமாக அனைத்து ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே அரசு ஆசிரியா்களின் பிள்ளைகளில் எத்தனை போ் அரசுப்பள்ளிகளில் படிக்கின்றனா் என்ற விவரத்தை அறிவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com