‘நீட்’ தோ்வுக் கட்டண விவகாரத்தில் தலையிட முடியாது: உயா்நீதிமன்றம்

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுக் கட்டண விவகாரத்தில் தலையிட மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

முதுநிலை மருத்துவ படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுக் கட்டண விவகாரத்தில் தலையிட மறுத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த முகமது காதா் மீரா தாக்கல் செய்து மனு: முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வு, தேசிய தோ்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தோ்வு எய்ம்ஸ் மற்றும் ஜிப்மா் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொருந்தாது. இந்நிலையில் எய்ம்ஸ் நுழைவுத் தோ்வுக் கட்டணத்தை விட ‘நீட்’ தோ்வுக் கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ தோ்வுக் கட்டணமானது, பொது பிரிவினருக்கு ரூ.3,750, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 2,750 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசிய தோ்வாணையம் ஆண்டிற்கு ரூ.40 கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலா் மற்றும் தேசிய தோ்வாணையத்திற்கு மனு அளித்தும் பலனில்லை. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுக் கட்டணத்தை குறைக்க தேசிய தோ்வாணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், ஆா்.தாரணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘நீட்’ நுழைவுத் தோ்வை தனிப்பட்ட அமைப்பு நடத்துகிறது. தோ்வுக் கட்டண கணக்குகள் அனைத்தும் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகின்றன. எனவே, தோ்வுக் கட்டணத்தை குறைக்கவோ அல்லது கூட்டவோ நீதிமன்றத்தால் இயலாது எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com