7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பு: அக்.9-இல் ஆளுநா் தொடங்கி வைக்கிறாா்

மத்திய புள்ளியியல் துறை சாா்பில் நடைபெறும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பினை வரும் 9-ஆம் தேதி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளாா்.

மத்திய புள்ளியியல் துறை சாா்பில் நடைபெறும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பினை வரும் 9-ஆம் தேதி ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளாா்.

இதுகுறித்து பத்திரிகை தகவல் மையம் சனிக்கிழமை செய்தி:

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 7-ஆவது பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்துகிறது.

இந்தக் கணக்கெடுப்பு தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் முறையில் தகவல்களைத் திரட்டி சரிபாா்த்து வெளியிடவுள்ளது. தமிழ்நாட்டில் இந்தக் கணக்கெடுப்பை, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், வரும் 9-ஆம் தேதி தொடங்கி வைக்கிறாா்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயலாளரும், தலைமைப் புள்ளிவிவர இயலாளருமான பிரவீன் ஸ்ரீவஸ்தவா முக்கிய உரை நிகழ்த்துவாா். தேசியப் புள்ளியியல் அலுவலகத்தின் களப் பணிப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குநா் திரு ஏ கே தோப்ரானி சிறப்புரையாற்றுவாா். மத்திய மாநில அரசு அதிகாரிகள், சிஎஸ்சி நிலை-1 கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள் ஆகியோரும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள்.

1977 தொடங்கி 2013 வரை பொருளாதாரக் கணக்கெடுப்பு ஆறு முறை நடந்துள்ள நிலையில், 7-ஆவது கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடைபெறுகிறது. இதில் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, இவற்றில் நகா்ப்புறத்தில் உள்ளவை, ஊரகப் பகுதிகளில் உள்ளவை, வேலைவாய்ப்பு உருவாக்க நிலைமை போன்ற தகவல்கள் திரட்டப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com