கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியல்ல: 49 பேர் மீதான வழக்கு குறித்து விஜயகாந்த்

கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியல்ல என்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான வழக்கு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்

சென்னை: கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியல்ல என்று மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான வழக்கு குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிறன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

தேச துரோக வழக்கு' என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப்பெற்று, உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com