"தமிழர்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல"

தமிழர்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஹிந்தி மொழி விருப்பப் பாடமாக இருக்க வேண்டும் என்றும் சிவசேனா தமிழக தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"தமிழர்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல"


தமிழர்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஹிந்தி மொழி விருப்பப் பாடமாக இருக்க வேண்டும் என்றும் சிவசேனா தமிழக தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சிவசேனா சார்பில் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து, சிவசேனா தமிழக தலைவர் ராதாகிருஷ்ணன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,

"தமிழர்கள் ஹிந்திக்கு எதிரானவர்கள் என்று ஒரு பார்வை உள்ளது. அது தவறானது. மாநிலத்தில் ஹிந்தியை ஆதரித்து போராட்டங்கள் நடைபெறும். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு விருப்பப் பாடமாக ஹிந்தி இருக்க வேண்டும். 

தமிழகத்தில் ஹிந்துத்வ செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். 

ஹிந்து கோயில்களின் சொத்துகள் மற்றும் விலை உயர்ந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் நிறைய அரசியல்வாதிகள் தலையீடு இருக்கிறது. 5 லட்சம் ஏக்கர் வரையிலான கோயில் நிலங்களை அரசியல்வாதிகள் மற்றும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை தமிழகத்தில் இருக்கும் ஏழை ஹிந்துக்களின் நலன்களுக்குப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com