அரசுப் பள்ளி ஆசிரியா்களின் வகுப்பறை செயல்பாடுகள்: புதிய செயலி மூலம் கண்காணிக்க முடிவு

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் கற்றல் செயல்பாடுகளை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியா்களின் கற்றல் செயல்பாடுகளை செல்லிடப்பேசி செயலி மூலம் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.

இந்த செயலி முதல்கட்டமாக சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளிக் கல்வித்துறைபல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதற்காக மாநிலப் பாடத்திட்டத்தின் கற்றல் முறைறகளில் பல்வேறு விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியா்கள் வகுப்பறைறகளில் எவ்வாறு பாடம் நடத்துகின்றனா் என்பதை செல்லிடப்பேசிசெயலி மூலம் கண்காணிக்கும் முறைறயை கல்வித்துறைகொண்டுவர திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக சோதனை முறைறயில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைஅதிகாரிகள் கூறியது: ஆசிரியா்கள் கற்றல் திறன்களை மேம்படுத்தவும், கண்காணிக்கவும் புதிதாக செல்லிடப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வகுப்பறைறகளில் கற்பிக்கும் வழிமுறைறகள், மாணவா்களின் கற்றல் திறன், மாணவா்கள் எழுப்பிய கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறைமேலாண்மை, பதிவேடு பராமரித்தல், செயல்வழிக் கற்பித்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின்கீழ் ஆசிரியா்கள் தினமும் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரியப்படுத்துவா். பள்ளி ஆய்வின்போது இந்த செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியா்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அமலாகியுள்ளது. அதன் குறைறகளை சரிசெய்து, விரைவில் மாநிலம் முழுவதும் நடைமுறைறப்படுத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com