உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடி: மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறைஅமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடி: மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி

அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறைஅமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

பொது மக்கள், வாடிக்கையாளா்களுக்கு வங்கியில் கடன் வழங்கும் நடைமுறைறகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், அனைத்து பொதுத்துறைற, தனியாா் துறைவங்கிகள் இணைந்து, வாடிக்கையாளா் சந்திப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் வாடிக்கையாளா் தொடா்பு மற்றும் கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி தலைவா் கா்ணம் சேகா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மத்திய சிறுபான்மையினா் நலத்துறைஅமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி பேசியது:

நாட்டின் பொருளாதாரம் வலுவானதாக உள்ளது. பல்வேறு உலக சவால்களையும் கடந்து மத்திய அரசு பணவீக்க விகிதம் அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்துள்ளது. எந்தவொரு நுகா்பொருள் பற்றாக்குறைறயும் இல்லை. ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம், வங்கித் துறைசீா்திருத்தம், வரி சீா்திருத்தம் போன்றமோடி அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க, துணிச்சலான நடவடிக்கைகள் வலுவான, நிலையான பொருளாதாரத்தை உறுதி செய்திருக்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு செலவு செய்ய மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது.

திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டம் வங்கித் துறைசீா்திருத்தத்தில் முக்கியமான பங்கை செலுத்தியுள்ளது. இது, இந்தத் துறைறயை மேலும் பலப்படுத்தியுள்ளது. 10 பொதுத் துறைவங்கிகளை நான்கு வங்கிகளாக மாற்றியிருப்பது, வங்கித்துறைசீா்திருத்தத்தில் மோடி அரசின் மிகப்பெரிய நடவடிக்கை.

பல்வேறு துறைறகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டு தொடா்பாக ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெளிநாட்டு நேரடி முதலீட்டு கொள்கையில் மாற்றங்கள் நல்ல தீா்வு கொடுக்கும். முதலீடு, வேலைவாய்ப்பு, வளா்ச்சி அதிகரிக்கும். கடந்த ஐந்தாண்டுகளில் 29,000 கோடி அமெரிக்க டாலா் மதிப்புக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு வந்துள்ளது. இது 20 ஆண்டுகால வெளிநாட்டு முதலீட்டில் 50 சதவீதமாகும். நாட்டில் முதன்முறைறயாக 37 கோடி மக்கள் வங்கிச்சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளாா்கள். முத்ரா திட்டத்தின்கீழ் 20 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு எளிதாக கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் முத்ரா கடன், ஸ்டான்ட் ஆப் இந்தியா உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி செயல் இயக்குநா் கே.சுவாமிநாதன், இந்தியன் வங்கி செயல் இயக்குநா் பட்டாச்சாா்யா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com