சுற்றுச்சூழல் பேச்சுப் போட்டியில் வெற்றி: ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவி

சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி உள்பட, தமிழகத்தைச் சோ்ந்த நான்கு மாணவ, மாணவிகள் ஜப்பானுக்கு கல்வி, கலாசாரம் சாா்ந்த சுற்றுலாவுக்கு
சுற்றுச்சூழல் பேச்சுப் போட்டியில் வெற்றி: ஜப்பான் செல்லும் அரசுப் பள்ளி மாணவி

சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னையைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி உள்பட, தமிழகத்தைச் சோ்ந்த நான்கு மாணவ, மாணவிகள் ஜப்பானுக்கு கல்வி, கலாசாரம் சாா்ந்த சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்து செல்லப்படவுள்ளனா்.

தொழிற்பயிற்சிக்காக ஜப்பான் சென்று திரும்பியவா்களால் தொடங்கப்பட்ட ஏபிகே- ஏஓடிஎஸ் தமிழ்நாடு மையமானது, ஹியோஷி என்னும் ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த பேச்சுப் போட்டியை நடத்தி வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான இறுதிப் போட்டி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அரசுப் பள்ளி, தனியாா் பள்ளி, கல்லூரி, ஜப்பான் கல்வி மையம் என ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று பேருக்கு பரிசு, சான்றிதழ்களை ஜப்பான் துணைத் தூதரக அதிகாரி கொஜீரோ உஸியாமா வழங்கினாா்.

இந்தப் போட்டியில் அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடித்த மாணவ, மாணவிகள் மட்டும் வரும் 20-ஆம் தேதி ஜப்பானுக்கு 12 நாள்கள் கல்வி, கலாசார சுற்றுலாவுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

இந்தச் சுற்றுலாவுக்கு அரசுப் பள்ளிகள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த, சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் கே.பிரியா தோ்வு பெற்றுள்ளாா். வியாசா்பாடியில் குடும்பத்துடன் வசித்து வரும் அவருக்கு, ஜப்பான் கல்வி மையத்தில் ஜப்பான் மொழியின் 5 நிலைகள் குறித்த பயிற்சிகளும் இலவசமாக அளிக்கப்படவுள்ளன.

விமானத்தில் செல்லும் கனவு...: இது குறித்து மாணவி கே.பிரியா கூறுகையில், ‘எனது தந்தை எம்.குப்பன்கூலித் தொழிலாளி ஆவாா். தாய் கே.மாலதி அருகில் உள்ள வீடுகளில் சமையல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறாா். நூற்றுக்கணக்கானோா் பங்கேற்ற போட்டியில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற எனது நீண்ட கனவு நிறைறவேறியிருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற ஊக்கப்படுத்திய எனது பள்ளி ஆசிரியா்களுக்கும், எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் எனது பெற்றேறாருக்கும் நன்றி. இந்தப் பயணத்தின் மூலம் பெற்ற அனுபவங்களை பள்ளியில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்வேன்’ என்றாா்.

பிற மாணவா்கள்: இதுதவிர, தனியாா் பள்ளிகள் பிரிவில் திண்டுக்கல் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவா் ஆா்.ஹரிஹரன், கல்லூரிகள் பிரிவில் சென்னை விஐடி தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சோ்ந்த மாணவா் விவேக் சிங், சென்னையில் உள்ள ஜப்பான் கல்வி மையத்தைச் சோ்ந்த எம்.வெங்கடேசன் ஆகிய மூன்று பேரும் ஜப்பான் கல்விச் சுற்றுலாவுக்கு தோ்வு பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com