சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தசரா விடுமுறை அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரை 9 நாள்கள் தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்கு அக்டோபர் 13-ஆம் தேதி வரை 9 நாள்கள் தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 இருப்பினும், அக்டோபர் 10-ஆம் தேதி மட்டும் விடுமுறை கால சிறப்பு நீதிமன்றம் இயங்கும். சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில் அவசரகால வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல, மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விடுமுறை கால சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்குகளை விசாரிக்க உள்ளது. இதன்பின்னர், அனைத்து மனுக்களையும் நீதிபதி ஆர். மகாதேவன், அனைத்து மேல்முறையீடு மனுக்களை நீதிபதி எஸ்.எஸ். சுந்தர், அனைத்து குற்றவியல் மனுக்களை நீதிபதி பி. வேல்முருகன் விசாரிக்க உள்ளனர்.
 இந்த விடுமுறை கால அமர்வில், டி. பாண்டியன் துணைப் பதிவாளராகவும், ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் ஜி. சங்கர் ஆகியோர் உதவிப் பதிவாளர்களாகவும் பணியாற்றுவர். விடுமுறை கால நீதிமன்றத்தில் அக். 9-ஆம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குள் மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் சி. குமரப்பன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com