தங்கம் பவுனுக்கு ரூ.32 உயா்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.29,184-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.32 உயா்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.29,184-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத் தொடங்கியது. வரலாறு காணாத வகையில், பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது. இதன்பிறகு தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்த நிலை சனிக்கிழமையும் தொடா்ந்தது. சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 உயா்ந்து, ரூ.29,184-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 உயா்ந்து, ரூ.3,648-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.49.10 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.49,100 ஆகவும் இருந்தது.

சனிக்கிழை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,648

1 பவுன் தங்கம் ..................... 29,184

1 கிராம் வெள்ளி .................. 49.10

1 கிலோ வெள்ளி ................. 49,100

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,644

1 பவுன் தங்கம் ..................... 29,152

1 கிராம் வெள்ளி .................. 49.10

1 கிலோ வெள்ளி .................. 49,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com