வடலூரில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வடலூரில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
 ஜோதி வடிவிலான இறை வழிபாட்டை வலியுறுத்தும் வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம், வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை கடந்த 1865-ஆம் ஆண்டு நிறுவினார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்று கூறி ஜீவகாருண்ய தத்துவத்தை உரைத்த அவர், பொதுமக்களின் பசிப் பிணியைப் போக்க வடலூரில் தரும சாலையை நிறுவினார். இங்கு அணையா அடுப்பு மூலம் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
 கடலூர் மாவட்டம், மருதூர் கிராமத்தில் கடந்த 1923-ஆம் ஆண்டு வள்ளலார் பிறந்தார். இவரது 197-ஆவது அவதார தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வடலூரில் உள்ள திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில், திருஅருள்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற நாள் (பிறந்த தினம்) விழா கொண்டாடப்பட்டது.
 விழாவில், சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு தரும சாலையில் சன்மார்க்கக் கொடியேற்றமும் நடைபெற்றது. தொடர்ந்து, சத்திய ஞான சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சன்மார்க்க அன்பர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
 வள்ளலார் வருவிக்கவுற்ற ஊரான (பிறந்த ஊர்) திருமருதூரில் காலை 8 மணிக்கு சன்மார்க்கக் கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. மாலை 4 மணி முதல் திருஅருள்பா இன்னிசை நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. பார்வதிபுரத்தில் சன்மார்க்க சொற்பொழிவு நடத்தப்பட்டது.
 நிகழ்ச்சிகளில் உதவி ஆணையர் ஜெ.பரணிதரன், நிர்வாக அலுவலர் கோ.சரவணன், ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் இரா.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு வடலூர், மருதூர் உள்பட பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com