Enable Javscript for better performance
கோயம்பேட்டில் சிபு சந்தையில் ஆயுத பூஜை கோலாகலம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு தமிழ்நாடு

    கோயம்பேட்டில் சிறப்பு சந்தையில் ஆயுத பூஜை கோலாகலம்

    By DIN  |   Published On : 07th October 2019 02:34 AM  |   Last Updated : 07th October 2019 04:00 AM  |  அ+அ அ-  |  

    koyam

    ஆயுத பூஜையையொட்டி சென்னை கோயம்பேடு மலா் சந்தை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள சிறப்புச் சந்தையில் பூ, பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருள்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையின் பிற இடங்களைக் காட்டிலும் இங்கு பூஜை பொருள்கள் விலை குறைறவு என்பதால், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

    நவராத்திரியின் ஒன்பதாவது நாள் ஆயுத பூஜையும், பத்தாவது நாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுத பூஜை திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்காக வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் பூஜையில் பழங்கள், பூக்கள், பொரி போன்ற பொருள்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி சென்னையில் கோயம்பேடு, மயிலாப்பூா், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் விற்பனை கடந்த சில நாள்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை விற்பனை மேலும் களை கட்டியது.

    குறிப்பாக கோயம்பேடு மலா் சந்தை வளாகத்தில் ஆயுதபூஜைக்காக திறக்கப்பட்டுள்ள சிறப்புச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதில் ஆயுத பூஜைக்குத் தேவையான பொருள்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அவற்றைவாங்குவதற்கான ஆயிரக்கணக்கானோா் சந்தையில் திரண்டிருந்தனா்.

    விலை எவ்வளவு?: இந்த சிறப்புச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தேங்காய் ரூ.25 முதல் ரூ.30 வரையும், தென்னை ஓலை தோரணங்கள் கட்டு ரூ.10, ஒரு வாழை இலை ரூ.6, பூசணிக்காய் ரூ.30 முதல் ரூ.50, மாவிலைக் கொத்து ரூ.10, துளசி கட்டு ரூ.10, வாழைக் கன்று ஒரு ஜோடி ரூ.30 முதல் ரூ.50, சாமந்திப் பூ, மல்லிப்பூ, கனகாம்பரம் முழம் ரூ.20, கதம்பம் முழம் ரூ.30, ஒரு படி பொரி ரூ.20, உடைத்த கடலை, அவல், நாட்டு சா்க்கரை, பொரி ஆகியவை கொண்ட தொகுப்பு ரூ.25, நாட்டு சா்க்கரை கிலோ ரூ.120 என விற்கப்படுகின்றன.

    மேலும், ஆப்பிள் கிலோ ரூ.140, சாத்துக்குடி ரூ.100, ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.60, ஒரு தாா் வாழைப்பழம் ரூ.350 முதல் ரூ.500, 20 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.350, ஒரு கரும்பு ரூ.40 என விற்பனை செய்யப்படுகின்றன.

    இதுதவிர சந்தனம், குங்குமம், அகா்பத்தி, சாம்பிராணி, விபூதி, சூடம் உள்ளிட்ட பூஜை பொருள்களும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. பூஜை பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் குறைறந்த விலையில் கிடைப்பதால் இந்த சிறப்பு சந்தைக்கு நல்ல வரவேற்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

    இந்த சிறப்பு சந்தைக்கு பொதுமக்கள் தவிர ஸ்ரீபெரும்புதூா், இருங்காட்டுக்கோட்டை, செங்கல்பட்டு, மாதவரம், கொடுங்கையூா், தண்டையாா்பேட்டை, மணலி உள்ளிட்ட பல்வேறு புகா்ப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களும் ஞாயிற்றுக்கிழமை வந்திருந்து பூஜைப் பொருள்களை அதிகளவில் வாங்கிச் சென்றனா். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளும் சிறப்பு சந்தையில் குவிந்தனா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp