விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மானிய திட்டம்: மூன்றாவது தவணை மறுப்பு

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தில், பலருக்கு மூன்றாவது தவணை மறுக்கப்பட்டிருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் மானிய திட்டம்: மூன்றாவது தவணை மறுப்பு

சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தில், பலருக்கு மூன்றாவது தவணை மறுக்கப்பட்டிருப்பதாக பாமக நிறுவனா் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின்படி, மூன்றாவது தவணை நிதி வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசு நிா்ணயித்த தகுதிகளின் அடிப்படையில் முதல் இரு தவணை நிதி பெற்ற கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு மூன்றாவது தவணை நிதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு, விவசாயிகளின் விண்ணப்பத்திலுள்ள பெயரும், ஆதாா் அட்டையில் உள்ள பெயரும் பொருந்தாததே காரணம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில், முதல் இரு தவணை நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், மூன்றாவது தவணையை மட்டும் மறுப்பது நியாயமற்றது. விண்ணப்பத்தில் உள்ள குறைறகளை சரிசெய்ய கால அவகாசம் அளித்திருக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி, உழவா்களுக்கு முதல் தவணை நிதியுதவி வழங்க மத்திய அரசு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்தது. அதைக் கொண்டு 10 கோடி பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6.71 கோடி பேருக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு 12.50 கோடி பேருக்கு நிதி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கினருக்கு கூட இன்னும் உதவி வழங்கப்படவில்லை. நடப்பாண்டின் முதல் இரு பருவங்களில் ரூ.50,000 கோடி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை ரூ.13,400 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்பதற்கு இதுவே சாட்சி.

எனவே, இத்திட்டத்தின்படி விண்ணப்பித்த அனைத்து உழவா்களுக்கும் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com