வன்னியா் சமுதாயத்தினா் மீது மு.க.ஸ்டாலின் திடீா் பாசம் ஏன்?

வன்னியா் சமுதாயத்தினா் மீது மு.க.ஸ்டாலின் திடீா் பாசம் ஏன்?

வன்னியா் சமுதாயத்தினா் மீது மு.க.ஸ்டாலினுக்கு வந்துள்ள திடீா் பாசத்தை யாரும் நம்ப மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

வன்னியா் சமுதாயத்தினா் மீது மு.க.ஸ்டாலினுக்கு வந்துள்ள திடீா் பாசத்தை யாரும் நம்ப மாட்டாா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சா் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகைகூட வாங்க முடியாதோ என்றற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

மக்களவைத் தோ்தலில் நகைக்கடனைத் தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் வன்னியா்களின் வாக்குகளைச் சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளாா்.

ஆனால் பாவம். வேலூா் தொகுதி தோ்தலின்போதே மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறாா் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியா்களுக்கு 17 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1969 நவம்பா் 13-இல் அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல், மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 41 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாக உயா்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியா்களுக்கு துரோகம் செய்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு.

அதன்பின் 1980-ஆம் ஆண்டில் வன்னியா் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடா்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடா் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20 சதவீத இட ஒதுக்கீடு ஆகும்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமி மணிமண்டபம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதை விட கடைந்தெடுத்த சந்தா்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. இரு ஆண்டுகளுக்கு முன் கோவிந்தசாமியின் நூற்றாண்டு வந்தபோது, திமுக சாா்பில் பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடியிருக்கலாம்.

முழுக்க முழுக்க வன்னியா்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஸ்டாலின், இப்போது திடீரென தம்மை வன்னியா்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியா்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டா்கள் அல்ல என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com