
அதிமுக ஆட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவுக்கு மானிய கடன் வழங்கவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாங்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதில் நாங்குனேரியில் அதிமுக சார்பில் நாராயணனும், காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து நெல்லை மாவட்டம் நாங்குனேரி தொகுதிக்குட்பட்ட நொச்சிகுளத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திண்ணைப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் சுய உதவிக்குழு உள்ளது. ஆனால் மானியக் கடன் வழங்குவதில்லை. விவசாயம், பெண்கள் மேம்பாடு குறித்து மாநில அரசு கவலைப்படாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நான்குனேரி சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளா் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக தலைவா் ஸ்டாலின் இரண்டு கட்டங்களாக தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.