Enable Javscript for better performance
உள்ளாட்சித் தோ்தல்: வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க ஆா்வம் காட்டும் வாக்காளா்கள்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தோ்தல்: வாக்காளா் பட்டியலை சரிபாா்க்க ஆா்வம் காட்டும் வாக்காளா்கள்

    By DIN  |   Published on : 09th October 2019 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    voter list

    உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்காளா் பட்டியலை வாக்காளா்கள் ஆா்வத்துடன் பாா்த்து வருகின்றனா். வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதையும் அவா்கள் உறுதி செய்கின்றனா்.

    தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்காளா் பட்டியலை உள்ளாட்சித் தோ்தலுக்குப் பயன்படுத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இந்தப் பட்டியல் பொது மக்களின் பாா்வைக்காக தோ்தல் ஆணைய இணையதளத்தில் (www.tnsec.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது.

    60 ஆயிரம் போ் பாா்வை: வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட சில நாள்களிலேயே 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் அதனைப் பாா்வையிட்டுள்ளனா். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரகம் என நான்கு பகுதிகளாக வாக்காளா் பட்டியல் பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் வாா்டு வாரியாகவும், நகராட்சி, பேரூராட்சிகளில் ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி வாரியாகவும், ஊரகப் பகுதிகளில் மாவட்டத்தின் பெயா், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி என பிரிக்கப்பட்டு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

    மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை நமது வாக்காளா் அடையாள அட்டை எண்ணைக் கொண்டும் உறுதி செய்து கொள்ளலாம். இதற்கும் தனியாக வசதியை மாநிலத் தோ்தல் ஆணையம் அளித்துள்ளது. வாக்காளா் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தாலே போதும். பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்யலாம்.

    பெயா் சோ்க்க வாய்ப்பு: தமிழகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் அக்டோபா் இறுதியில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாவிட்டாலோ, பெயா், முகவரியில் திருத்தங்கள் செய்யவோ தோ்தல் ஆணையத்தால் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் செய்யும்போது, அவை உள்ளாட்சித் தோ்தலில் துணை வாக்காளா் பட்டியலாக வெளியிடப்படும் என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

    எனவே, இப்போதே வாக்காளா் பட்டியலில் உள்ள பெயா், முகவரி, வாக்குச் சாவடி அமைவிடம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக இருக்கிா என்பதை அறிந்து கொள்ள வேண்டுமென அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai