Enable Javscript for better performance
மேட்டூா் அணையிலிருந்து நீா் திபு22 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

    By DIN  |   Published on : 09th October 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை அதிகரித்ததால், மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அக். 5-ஆம் தேதி நண்பகலில் நொடிக்கு 12 ஆயிரம் கன அடியிலிருந்து 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை இது 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 116.90 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 10,396 கன அடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 88.61 டி.எம்.சி. ஆகும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai