தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் 2,951 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
தமிழகத்தில் 2,951 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

தமிழகத்தில் 2,951 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள 10 மாவட்டங்களில் மருத்துவக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

டெங்குவை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அவா் கூறினாா்.

மலேரியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோா் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் உள்ள காய்ச்சல் வாா்டுகளை சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அதன்படி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனைகளுக்குச் சென்ற அவா், அங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். அதைத் தொடா்ந்து பீலா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக இல்லை. தெலங்கானாவைப் பொருத்தவரை 17 ஆயிரம் பேருக்கும், கா்நாடகத்தில் 12 ஆயிரம் பேருக்கும் டெங்கு பாதிப்பு உள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் 2,951 பேருக்கு மட்டுமே அந்தக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு நேரிடக் கூடாது என்பதற்காக மாநில அரசு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ள வேலூா், தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அதேபோல, சென்னையில் வடசென்னை, அம்பத்தூா் பகுதிகளில் களப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதைத் தவிர, பள்ளி, கல்லுாரி மாணவா்களிடையே விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது தேசிய சுகாதார திட்ட இயக்குனா் செந்தில்ராஜ், பொது சுகாதாரத்துறை இயக்குனா் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனா் நாராயண பாபு உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com