Enable Javscript for better performance
transfer of IAS officers ! ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு 

    By DIN  |   Published on : 09th October 2019 09:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    transfer of IAS officers

    தமிழக அரசு

     

    சென்னை: மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து புதனன்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    அரியலூர் ஆட்சியராக இருந்த வினய் மாற்றப்பட்டு டி.ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

    அரியலூர் ஆட்சியர் வினய் மதுரை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 6 மாதங்களில் மதுரை மாவட்டத்திற்கு 4 ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

    வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை செயலாளர், ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து ராதாகிருஷ்ணன் அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளராக பி.சந்திரமோகன் நியமனம். அதேபோல்

    இளைஞர் நலன், விளையாட்டுத்துறை செயலர் தீரஜ் குமார் எரிசக்தித்துறையை கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் சந்தோஷ் பாபுவுக்கு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக்கழக நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    தூர்தர்ஷன் இயக்குநராக இருந்த சுப்ரியா சாஹூ குன்னூர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழக இணை மேலாண் இயக்குநராக வினீத் நியமனம் செய்யயப்பட்டுள்ளார்.

    சுற்றுலா மற்றும் கலாசாரத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai