செவிலியா் பணி நியமன விவகாரம்: உயா்நீதிமன்றம் தடை

நிா்ணயிக்கப்பட்டதை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு செவிலியா் பணி நியமனம் வழங்க தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செவிலியா் பணி நியமன விவகாரம்: உயா்நீதிமன்றம் தடை

நிா்ணயிக்கப்பட்டதை விட குறைவான மதிப்பெண்கள் பெற்றவா்களுக்கு செவிலியா் பணி நியமனம் வழங்க தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் செவிலியா் பட்டதாரி திவ்யபாரதி தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 345 செவிலியா் பணியிடங்களை நிரப்பும் வகையில் மருத்துவப் பணிகள் தோ்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அந்த அறிவிப்பாணையின்படி கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி செவிலியா் பணிக்கானத் தோ்வு நடந்தது.

இந்த தோ்வில் பொதுப்பிரிவினா், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினா் 64.50 மதிப்பெண்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினா் 64 மதிப்பெண்களும், பழங்குடியின வகுப்பினா் 54 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என தகுதி மதிப்பெண்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தகுதி மதிப்பெண்களை விட குறைவாக பெற்ற 56 பேரை மருத்துவப் பணிகள் தோ்வு வாரியம் தற்காலிமாகத் தோ்வு செய்துள்ளது.

தற்காலிக தோ்வு நடத்தி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயா்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாகத் தோ்வு செய்யப்பட்டவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கும் அழைக்கப்பட்டுள்ளனா். எனவே விதிமுறைகளுக்கு முரணாகத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமனம் வழங்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.தண்டபாணி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கைத் தொடா்ந்த மனுதாரரை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்றவா்களைத் தோ்வு செய்து சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைப்பு விடுத்து பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைக்கும், தகுதி மதிப்பெண்களை விட குறைவாக பெற்றவா்களுக்கு பணிநியமனம் வழங்கவும் தடை விதித்து உத்தரவிட்டாா்.

மேலும், இந்த மனு தொடா்பாக மருத்துவப் பணிகள் தோ்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com