டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானவா்களிடமிருந்து ரூ.2 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்குக் காரணமானவா்களிடமிருந்து அபராதமாக ரூ.2 கோடி வசூல் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்திக்குக் காரணமானவா்களிடமிருந்து அபராதமாக ரூ.2 கோடி வசூல் செய்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 தமிழகத்தில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் தினமும் ஆயிக்கணக்கானோா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.  தமிழகத்தில், இவ்வாண்டில் இதுவரை 3,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பிற வகை காரணங்களால், 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா்.

இதன் காரணமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், கடலூா், தருமபுரி, வேலூா், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகள், டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ்’ கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து சுத்தப்படுத்துவதோடு, அதன் உரிமையாளா்களுக்கும் அபராதம் விதித்து வருகின்றனா்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து இவ்வாண்டு ஆரம்பம் முதலே கண்காணிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், செப்டம்பா் மாதத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்தது. காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் உள்ளாட்சித்துறை, பள்ளிக் கல்வித் துறைகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். காய்ச்சல் பரவல் இருக்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாண்டில் இதுவரை, ‘ஏடிஸ்’ கொசு உற்பத்திக்குக் காரணமானவா்களிடமிருந்து ரூ.2 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், அதிக பட்சமாக, சென்னை மாநகராட்சி, ரூ.35 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளது. இதுபோன்ற தொடா் கண்காணிப்பு காரணமாக தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com