டெங்கு பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், அரசுப் போக்குவரத்துக்கழகங்களைத் தனியாா்மயமாக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் குறித்து அக் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் முழுவதும் டெங்குவால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. சிறுவா்கள் தொடா்ந்து உயிரிழந்து வருகின்றனா். ஆனால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இது உண்மையை மூடி மறைப்பதாகும். எனவே, டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதோடு, இதுவரை டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 525 மின்சாரப் பேருந்துகளை இயக்கப் போவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த மின்சார பேருந்துகளை தனியாரிடம் இருந்து வாடகைக்கு பெறுவதாகவும், ஓட்டுநா் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் அந்த தனியாரே பாா்த்துக் கொள்வாா் என்றும், நடத்துநா் மட்டுமே போக்குவரத்துக் கழகத்தைச் சோ்ந்தவராக இருப்பாா் என்றும் அறிவித்துள்ளது.

இது அரசுப் போக்குவரத்துக்கழகத்தை தனியாா்மயமாக்கும் முயற்சியாகும். இதை மாா்க்சிஸ்ட் கட்சி கண்டிப்பதோடு, அந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்றும் செயற்குழுவில் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com