சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.29,184-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத் தொடங்கியது. வரலாறு காணாத வகையில், பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை தங்கம் விலை மீண்டும் ரூ.29 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.29,184-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து, ரூ.3,648-க்கு விற்பனையானது. அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.49 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து, ரூ.49,000 ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் .................... 3,648
1 பவுன் தங்கம் ..................... 29,184
1 கிராம் வெள்ளி .................. 49.00
1 கிலோ வெள்ளி ................. 49,000
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 3,652
1 பவுன் தங்கம் ..................... 29,216
1 கிராம் வெள்ளி .................. 48.90
1 கிலோ வெள்ளி .................. 48,900.