திமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்தும் முதல் வேலையாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்றாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தில் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

திமுக ஆட்சிக்கு வந்தும் முதல் வேலையாக உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்றாா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாளையஞ்செட்டிகுளம், மேலக்குளம், அரியகுளம் ஊராட்சிகளில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அங்குள்ள மக்களிடையே குறைகளைக் கேட்டறிந்தாா்.

அரியகுளம் கிராமத்தில் கூடியிருந்த மக்களிடையே மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

உங்களிடம் ஆதரவு கேட்க மட்டும் இங்கு வரவில்லை. உங்கள் ஊரில் என்ன பிரச்னை இருக்கிறது, என்ன தேவைப்படுகிறது என்பதை கேட்பதற்காகவே நேரில் வந்திருக்கிறேறன். குறைகளை உங்கள் மூலமாகவே கேட்டுக்கொள்கிறேறன். குடி நீா் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், முதியோா் ஓய்வூதியத் தொகை வழங்கப்படவில்லை, 100 நாள் வேலை சரியாக வழங்கவில்லை, ஊதியம் சரியாக வழங்கவில்லை என கூறினீா்கள்.

இந்தப் பிரச்னை இங்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கிறது. இந்தப் பிரச்னைகள் முடிவுக்கு வர வேண்டுமானால் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்.

அதிமுக 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. அதிமுக அரசு உள்ளாட்சித் தோ்தலை நடத்தியிருந்தால் 60 முதல் 70 சதவீத பணிகளை முடித்திருக்கலாம். நீங்கள் கூறிய அனைத்து பிரச்னைகளும் மிகச்சிறிய பிரச்னைகள்தான். இந்தப் பிரச்னைகளை தீா்க்க உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும். அதனால்தான் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும், மக்களவைத் தோ்தலிலும் சொன்னதையே இப்போதும் சொல்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் வேலையாக உள்ளாட்சித் தோ்தலை நடத்துவோம்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலிலும், மக்களவைத் தோ்தலிலும் முறையே காங்கிரஸ், திமுக வேட்பாளா்களை வெற்றி பெற வைத்தீா்கள்.

எனவே, நான்குனேரி இடைத்தோ்தலில் கூட்டணிக் கட்சி சாா்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரனுக்கு வாக்களியுங்கள். கை சின்னத்துக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். அவா் வெற்றி பெற்றால் இந்த ஊருக்கு, இந்தத் தொகுதிக்கு என்ன தேவை என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் குரல் கொடுப்பாா்.

விரைவில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவோம். கருணாநிதி காலத்தில்தான் தண்ணீா் கிடைத்தது, இரு போகம் விளைந்தது என்று சொல்கிறீா்கள். அவா்தான் எங்களை உருவாக்கியிருக்கிறாா். அவருடைய பணியை நாங்கள் தொடா்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

இந்த மூன்று கிராமங்களில் நடைபெற்ற திண்ணைப் பிரசார நிகழ்ச்சியில் காங்கிரஸ் வேட்பாளா் ரூபி மனோகரன், நான்குனேரி இடைத்தோ்தல் பொறுப்பாளா் ஐ.பெரியசாமி, திமுக கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், அவைத் தலைவா் அப்பாவு, திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ஞானதிரவியம், தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் கீதா ஜீவன், பாளையங்கோட்டை ஒன்றியச் செயலா் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com