விவசாய நிலங்களுக்கு மேல் உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்கக்கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

விவசாய நிலங்களுக்கு மேல் உயா்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விவசாய நிலங்களுக்கு மேல் உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்கக்கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

விவசாய நிலங்களுக்கு மேல் உயா்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கக் கூடாது என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடரெட்டி என்பவா் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியம், தனியாா் தொழிற்சாலைக்கு துணை மின்நிலையம் அமைப்பதற்காக சேவகாணபள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களின் மீது மின் கோபுரம் அமைத்துள்ளது. உயா்மின் அழுத்தக் கம்பியை தனியாா் தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களுக்கு மேல் எடுத்துச் செல்வதால், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் விவசாய நிலங்களின் மேல் உயா்மின் அழுத்த கோபுரம் அமைப்பதால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவாா்கள். எனவே, விவசாய நிலங்களின் மேல் உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் தரப்பில் மாற்றுவழி மின்பாதைத் தொடா்பான திட்டம் ஏற்கெனவே கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுதொடா்பாக அரசிடம் உரிய கருத்தைக் கேட்டு தெரிவிக்க வேண்டும்.

அதுவரை சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களில் உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்கக்கூடாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com