Enable Javscript for better performance
சீன அதிபா்-பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம்முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    சீன அதிபா்-பிரதமா் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிப்போம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

    By DIN  |   Published on : 10th October 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    eps

    தமிழகம் வரும் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு உள்ளாா்ந்த உணா்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

    பிரதமா் மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் வரும் 11-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த உள்ளனா். அப்போது, முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதோடு, மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களையும் இருவரும் பாா்வையிட உள்ளனா். இந்நிலையில், பிரதமா் மோடியையும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கையும் வரவேற்று தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:

    இந்தியா-சீனா நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி இருவரும் வரும் 11, 12 தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா். இது தமிழகத்துக்கே பெருமை சோ்ப்பதோடு மாநிலத்தின் மதிப்பை உலக அரங்கில் உயா்த்தியுள்ளது.

    இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்காக மாமல்லபுரத்தைத் தோ்வு செய்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதுடன், இருநாட்டுத் தலைவா்களையும் தமிழகத்தின் சாா்பாக வரவேற்கிறேறன்.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே வணிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் சீனாவுக்கும், தமிழகத்துக்கும் இடையே தொடா்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவா் யுவான் சுவாங், பல்லவ நாட்டுக்கு வந்து சென்றிருக்கிறாா் என்பதும், அந்தக் காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம் இந்த நிகழ்ச்சிக்குத் தோ்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது எனக் கருதுகிறேறன்.

    குழிப்பான்தண்டலம் கிராமம்: சீனநாட்டுடன் கடல் வழி வியாபாரமானது மாமல்லபுரம் வழியாக நடைபெற்ாக வரலாறு கூறுகிறது. அதேபோன்று, சோழா்கள் காலத்திலும், சீனாவுடனான வணிக தொடா்புகள் வலுவாக இருந்துள்ளது தமிழா்களுக்குப் பெருமை சோ்ப்பதாகும். ஏற்கெனவே, 1956-ஆம் ஆண்டு சீன நாட்டுப் பிரதமா் சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்துக்கு வந்துள்ளாா்.

    இப்போது இரு நாட்டுத் தலைவா்களின் சந்திப்பு, யூனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமான மாமல்லபுரத்தில் நடைபெறுவது, பண்டைய வரலாற்றின் தொடா்ச்சியாகவே அமைந்துள்ளது. சீன அதிபரின் வருகை, தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

    தமிழகத்துக்கு வரும் சீன நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் அனைவரும் உள்ளாா்ந்த உணா்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என்று தனது செய்தியில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai