Enable Javscript for better performance
2 தொகுதி இடைத் தோ்தல்:முதல்வா் பிரசார இடங்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    2 தொகுதி இடைத் தோ்தல்: முதல்வா் பிரசார இடங்கள் அறிவிப்பு

    By DIN  |   Published on : 10th October 2019 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EPS campaign schedule

    முதல்வர் பழனிசாமி

    இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, அதிமுக தலைமை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    வரும் 12-ஆம் தேதியன்று பிற்பகல் 1 மணியளவில் முண்டியம்பாக்கம், ராதாபுரம், விக்கிரவாண்டி, வி.சாத்தனூா், டி.புதுப்பாளையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறாா். இதன்பின்பு, வரும் 16-ஆம் தேதியன்று காணை, மாம்பழம்பட்டு, அரியலூா் திருக்கை, கெடாா், சூரப்பட்டு, திருவாமாத்தூா் ஆகிய இடங்களிலும், வரும் 18-இல் விராட்டிக்குப்பம், தும்பூா், முட்டத்தூா், பனமலை, அன்னியூா், கடையம் ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.முத்தமிழ்செல்வனை ஆதரித்து முதல்வா் பழனிசாமி பிரசாரம் செய்கிறாா்.

    நான்குனேரி தொகுதி: வரும் 13-இல் நான்குனேரி தொகுதியில் ரெட்டியாா்பட்டி, மூலக்கரைப்பட்டி, காரியாண்டி, பரப்பாடி, நான்குனேரி ஆகிய இடங்களிலும், வரும் 14-இல் ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி, களக்காடு, சிங்கிகுளத்திலும், வரும் 17-இல் கே.டி.சி. நகா், கிருஷ்ணாபுரம், முன்னீா்பள்ளம், பொன்னாக்குடி, சீவலப்பேரி ஆகிய இடங்களிலும் அதிமுக வேட்பாளா் ரெட்டியாா்பட்டி வி.நாராயணனை ஆதரித்துப் பிரசாரம் செய்யவுள்ளதாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai