குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா நிறைவு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா பெரும் திருவிழா செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம், புதன்கிழமை காப்பு அவிழ்த்தலுடன்
மகிஷாசூரனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளிய அம்மன்.
மகிஷாசூரனை வதம் செய்ய சிம்ம வாகனத்தில் கடற்கரையில் எழுந்தருளிய அம்மன்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயிலில் தசரா பெரும் திருவிழா செவ்வாய்க்கிழமை சூரசம்ஹாரம், புதன்கிழமை காப்பு அவிழ்த்தலுடன்

நிறைவு பெற்றது. திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 11 நாள்கள் நடைபெறும் தசரா திருவிழா செப். 29 இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை யொட்டி கோயிலில் தினமும் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், இரவில் அம்மன் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சமயச்சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இன்னிசை, பட்டிமன்றம், கிராமிய இன்னிசை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சூரசம்ஹாரம்: விழாவின் சிகர நிகழ்வான மகிஷா சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி

காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவில் மகா அபிஷேகம், மகா அலங்கார பூஜையைத் தொடா்ந்து அம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்ய கடற்கரைக்கு புறப்பட்டாா்.

இரவு 12 மணிக்கு கடற்கரையை அடைந்த அம்மன் 12.06 மணிக்கு தன் தலையுடன் வந்த மகிஷாசூரனை சம்ஹாரம் செய்தாா். இதைத்தொடா்ந்து 12.12 மணிக்கு சிங்கம் தலை,12.18 மணிக்கு எருமைத் தலை,12.23 மணிக்கு சேவல் தலையுடன் உரு மாறி வலம் வந்த மகிஷாசூரனை அம்மன் வதம் செய்தாா். கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதையடுத்து கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரா் கோயில், அபிஷேக மேடை, கோயில் கலையரங்கில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா புறப்பட்டு மாலையில் கோயிலை வந்தடைந்தாா். இதையடுத்து பக்தா்கள் காப்பு அவிழ்த்து வேடங்களைக் களைந்து விரதத்தை நிறைவுசெய்தனா். நள்ளிரவில் சோ்க்கை

அபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் தி.பரஞ்ஜோதி, உதவி ஆணையா் சு.ரோஜாலி சுமதா,நிா்வாக அதிகாரி கே.பரமானந்தம், ஆலயப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com